வாக்னர் கூலிப்படையின் நிறுவனங்களை காதலியிடம் ஒப்படைத்த புடின்
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் முன்னெடுத்து நடத்திவந்த பலம்பொருந்திய ஊடக நிறுவனத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஜிம்னாஸ்டிக் காதலியிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான 40 வயது அலினா கபேவா இனி தொடர்புடைய ஊடக நிறுவனத்தின் தலைவராக பொறுப்புக்கு வர இருக்கிறார். விளாடிமிர் புடினின் மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான அலினா கபேவா, ஏற்கனவே ரஷ்யாவின் முடிசூடாத ராணியார் என்றே குறிப்பிடப்படுகிறார்.
ஏற்கனவே ரஷ்ய ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருந்துவரும் அலினா கபேவா, இனி பிரிகோஜின் உருவாக்கியுள்ள Patriot ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
இதனூடாக ரஷ்யாவில் பிரிகோஜினின் செல்வாக்கை மொத்தமாக அழிக்க, புடின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரஷ்யாவில் Patriot ஊடக குழுமத்தின் கீழில் டசின் கணக்கான ஊடக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
ஜூன் மாத இறுதியில் ரஷ்ய நிர்வாகத்திற்கு எதிராக பிரிகோஜின் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த நிலையில், அந்த நிறுவனங்கல் அனைத்தும் தற்போது தேசிய ஊடக குழுமத்துடன் இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
மேலும், பிரிகோஜின் தொடர்பான அனைத்தும் கலைக்கப்படும் என்றே ரஷ்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ல் இருந்தே தேசிய ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்பில் செயல்பட்டு வருகிறார் அலினா கபேவா.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் கபேவா, மிக விரைவில் Patriot ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்றே கூறப்படுகிறது.
Leave a comment