சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறும் புடின்

2 53

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறும் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள நாடொன்றிற்கு விளாதிமிர் புடின் (Vladimir Putin) பயணிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் எதற்காவது புடின் சென்றால், அந்த நாடு அவரைக் கைது செய்ய முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றான மங்கோலியா நாட்டுக்கு அடுத்த வாரம் ரஷ்ய ஜனாதிபதியான புடின் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள மங்கோலியாவுக்கு புடின் பயணிக்க உள்ளார்.

மேலும், சோவியத் யூனியனும் மங்கோலியாவும் இணைந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்ட Battles of Khalknin Gol என்று அழைக்கப்படும் போரின் 85ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புடின் மங்கோலியாவுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version