இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள்
இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை போர் இன்றி பேச்சுவார்த்தையின் மூலம் மீட்டுத்தர கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கரளை எழுப்பியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேல் பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டத்தை களைக்க முற்பட்டதையடுத்து அங்கு சில முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.