பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இஸ்ரேல் நாட்டிற்கும் அதன் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராகவும், அமெரிக்க நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகரசபை வேட்பாளராக போட்டிபோட்ட நிஷா சாருக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், சிவில் செயற்பாட்டாளர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இலங்கையின் ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.