tamilni 4 scaled
உலகம்

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

Share

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் பிரேசில் நாட்டின் ஜோதிடர் ஒருவர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ளதில் 6 சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகம் இணையப் போரின் விளிம்பில் தத்தளிப்பதாக எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில், தாம் இதுவரை சொன்னதே நடந்துள்ளது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ். பலர் ஏளனம் செய்து புறக்கணிக்க, உலகம் மொத்தம் குழப்பத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய மைக்ரோசாப்ட் செயலிழப்பு நடந்தேறியது.

இதனால் மூன்று நாட்களுக்கு மேல் செய்தி ஊடக நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பெரும் வணிக வளாகங்கள் என மொத்தமும் ஸ்தம்பித்தது.

தற்போது வரையில் மைக்ரோசாப்ட் செயலிழப்பு மீளவில்லை என்றே கூறப்படுகிறது. Athos Salomé என்ற வாழும் நாஸ்ட்ராடாமஸ் தான் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் முதல் முறையாக உலகை எச்சரித்தவர்.

எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்றும் இவர் கணித்திருந்தார். கத்தார் கால்பந்து உலகக் கிண்ணம் முதல் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்பதுடன், ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணம் கூட இவர் கணித்தது போன்றே நிறைவேறியது.

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் குளறுபடிகள் உட்பட தமது மேலும் 5 கணிப்புகள் உறுதியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் தென் கொரியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மீது வடகொரியா தாக்குதல் முன்னெடுத்துள்ளதும் அவர்களின் VPN மென்பொருளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தாம் ஏற்கனவே கணித்துள்ளதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொன்று Safari, Chrome மற்றும் Firefox போன்ற இணைய உலாவிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என எச்சரித்திருந்தார். மூன்றாவதாக கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து அவர் எச்சரித்திருந்தார்.

சமீபத்தில் தான் இந்தியாவின் wazirx கிரிப்டோகரன்சி நிறுவனம் இணைய தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 230 மில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் யார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

பாரீஸ் ஒலிம்பிக் தொடர்புடைய இணைய அமைப்புகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென்றே Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, இணைய பாதுகாப்பை பலப்படுத்தியதால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...

Screenshot 2026 02 14 121516
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் ட்ரம்ப் குறித்த விவாதம்: மகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் குறித்த அரசியல் விவாதத்திற்குப்...