சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமன், சடா நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சிறைச்சாலையில், சவுதி ஆதரவு பெற்ற ஏமன் இராணுவப் படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடாத்தியுள்ளது.
சிறைச்சாலை உருக்குலைந்த நிலையில், ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த கைதிகள், பொதுமக்கள் மற்றும் ஆப்பிரிக்க நாட்டு அகதிகளின் சடலங்களை மீட்கும் காணொளியினை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறைந்தது 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 03 குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளை தாக்குதல் சம்பவ எதிரொலியால் இணைய சேவைகள் ஏமனில் முடங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா. கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது
#WorldNews