2 19
உலகம்செய்திகள்

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

Share

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் இவ்வாறான வித்தியாசமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது, நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 19 சிறைச்சாலைகள் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு பல சிறைச்சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டனையை விட மறுவாழ்வு அளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியின் பலனாக அந்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

இதேவேளை, போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உட்கட்டமைப்பை பராமரிக்கும் செலவு உயர்ந்துள்ளதால் ஒரு புதிய சவாலுக்கு நெதர்லாந்து முகங்கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...