புடினின் கூலிப்படைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

உக்ரைன் தாக்குதலில் மாஸ்கோ அதிகாரிகள் ரஷ்ய மக்களை தவறாக வழிநடத்துவதாக, புடினின் கூலிப்படைத் தலைவர் யேவ்ஜெனி பிரிகோலின் (Yevgeny Prigozhin) குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றரை ஆண்டை கடந்து நடந்து வரும் போரில் உக்ரைன் தாக்குதல் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பலமுறை கூறி வருகிறார்.

ஆனால், கிழக்கு உக்ரைன் பகுதியான பாக்முட் உட்பட நகரங்களில் பல மாதங்களாக புடினால் நிறுத்தப்பட்ட வாக்னர் கூலிப்படை ஒரு தாக்குதலை வழி நடத்தியது.

இந்நிலையில் வாக்னர் படையின் தலைவர் பிரிகோலின் உக்ரைன் தாக்குதல் தொடர்பில் மாஸ்கோவை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாஸ்கோவின் உயர்மட்ட அதிகாரிகள் உக்ரைனின் தாக்குதலின் போக்கைப் பற்றி ரஷ்யர்களை ஏமாற்றியதாக கூறிய அவர், போர்க்களத்தில் கீவ்வின் நகர்வை சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கள் படை நடத்திய தாக்குதல் குறித்த உண்மையை பாதுக்காப்பு அமைச்சகம் கூறவில்லை என்றும், உக்ரேனிய துருப்புகளிடம் பிரதேசத்தை இழந்ததாகவும் பிரிகோலின் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஆடியோ செய்தியில், ‘அவர்கள் ரஷ்ய மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் பல கிராமங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறை இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரிகோலின், இவை அனைத்தும் அனைவரிடம் இருந்தும் முற்றிலும் மறைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version