hzcovid040722a 1
உலகம்செய்திகள்

ஜனாதிபதி, சபாநாயர், பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

Share

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

67 வயதான ஹலிமா அவரது பேஸ்புக் பதிவில்,

“லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரியளவில் பாதிப்பில்லை. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இந்த வார நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், “சபாநாயகர் டான் தனது பதிவில்,

அறிகுறிகள் லேசாக இருக்கிறது என்றும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவுகிறது. எனவே உங்கள் முறை வரும்போது பூஸ்டர்களைப் பெறுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் (52), கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 87
செய்திகள்அரசியல்இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில்...

Untitled 86
செய்திகள்இலங்கை

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...