உலகம்செய்திகள்

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம்

Share
1794977 naomi1
Share

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர்.

28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது.

அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இதுவரை அதிபர் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணங்கள் நடந்துள்ளன.

முதல் முறையாக அதிபர் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது. பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...