தலிபான்கள் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவரின் குடும்பத்தின் முன்னிலையில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறிய நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர்.
இந்த ஆட்சியில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அவர்கள் வேலைக்கு செல்லவும் கல்வி கற்கவும் அனுமதியளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில்,
அபிகானில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனை ஆப்கானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது ருவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் 2 குழந்தைகளுக்கு தாயான 6 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்கு இரவுவேளையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆனால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். 1990 ஆம் ஆண்டுகளில் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி போலவே தற்போதும் நடைபெறுகிறது என ஆப்கான் பெண்கள் அஞ்சுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment