உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் உக்ரைன் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் இயற்கை எரிவாயு விநியோகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன.
குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களைக் குளிரில் இருந்து பாதுகாக்கப் பயன்படுத்தும் ஹீட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.