தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு அதிர்ச்சி

rtjy 84

தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமான எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Baselஇல் உள்ள சுவிஸ் மக்கள் கட்சி தொடர்பில், சாரா (Sarah Regez, 29) என்னும் இளம்பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆனால், தனக்கெதிராக துண்டுப்பிரதிகள் விநியோகிக்கபப்டுவது தொடர்பில் தகவலறிந்துள்ளார்.

”சாராவுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்பதே அந்த துண்டுப் பிரதிகளில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துண்டுப் பிரதிகளை யார் வெளியிட்டார் என்பதை அறிந்த அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாரவுக்கெதிராக துண்டுப் பிரதிகளை வெளியிட்டது அவருடைய பாட்டி என தெரியவந்துள்ளது.

மேலும், இதன் பின்னனி தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிவந்துள்ளன.

சாராவின் பாட்டி, நீண்ட காலமாக அந்நாட்டின் உள்ளூர் கவுன்சிலில் Social Democrat கட்சியின் பிரதிநிதியாக இருந்துவருகிறார்.

தன் பேத்தி, வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளதை அறிந்து தான் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக தனது பேத்திக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version