செய்திகள்உலகம்

வாகனப் பேரணிக்கு பொலிஸார் தடை!

273297763 10228573123896258 8681201558087269860 n
Share

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்கு பாரிஸ் பொலிஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது.

பேரணிகளால் பொது ஒழுங்கு சீர்குலையக் கூடிய சாத்தியம் இருப்பதால் நாளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை சகல வாகனப் பேரணிகளும் தடைசெய்யப்படுவதாக பாரிஸ் தலைமையகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பேரணிகளில் பங்குகொள்கின்ற வாகனச் சாரதிகள் நெடுஞ்சாலைகள் சட்ட விதிகளின் (highway code) L. 412-l சரத்தின் கீழ், இரண்டு ஆண்டுகள் சிறை, 4ஆயிரத்து 500 ஈரோக்கள் அபராதம் மற்றும் வாகன உரிமப் புள்ளிகளில் அரைவாசி பறிப்பு போன்ற தண்டனைகளுக்கு உட்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா ஒட்டாவாவில் தொடங்கப்பட்ட வாகனப் பேரணி போராட்டங்கள் தற்சமயம் பல நாடுகளுக்கும் பரவியுள்ளன. பிரான்ஸில் இந்த வாரம் பல இடங்களில் சிறிய அளவிலான வாகனப் பேரணிகள் நடைபெற்றிருக்கின்றன.

வார இறுதியில் பாரிஸ் நகருக்கான வீதிகளைத் தடுக்கும் நோக்கில் பெரிய அளவிலான பேரணிகளை நடத்துவதற்கான அழைப்பு சமூக வலைத் தளங்களூடாக விடுக்கப்பட்டிருக்கிறது.புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் அது குறித்து விழிப்படைந்துள்ளனர்.

ஏற்கனவே பல இடங்களில் சிறு வாகனப் பேரணி முஸ்தீபுகள் தடுக்கப்பட்டுள்ளன. சாரதிகள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை, தொற்று நிலைவரம் தணிந்து வருவதால் தடுப்பூசி பாஸ் நடைமுறையை மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நீக்குவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக்கிறார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...