புகைப்படக் கலைஞரைத் தாக்கிய பொலிஸார்: வெளியானது அதிர்ச்சி வீடியோ

Police attack

புகைப்படக் கலைஞர் ஒருவர் தாக்கப்படும் வீடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.

ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களின் போராட்டம் இடம்பெற்றபோது, புகைப்படங்களை எடுப்பதற்காகச் சென்ற புகைப்படக்கலைஞர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனியர்கள் மீதான பல்வேறு அடுக்குமுறைகளை கண்டித்து Sheikh Jarrah நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, பொதுமக்களும், பொலிஸாரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கியதுடன், வெடி குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற அசோசியேட்டட் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரை இவ்வாறு பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

#WorldNews

Exit mobile version