பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்

19 9

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்

சீனாவில் HMPV வைரஸ் தொற்று பயங்கரமாக பரவிவரும் நிலையில், அந்த வைரஸுக்கெதிரான அற்புத மருந்தை வாங்க மக்கள் மருந்தகங்கள் முன் முண்டியடித்துவருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் | Pharmacies Flooded People Rushing Buy

HMPV வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

சில சீன மருந்தகங்கள், HMPV வைரஸ் தொற்றுக்கு எதிராக Xofluza என்னும் மருந்தை விற்பனை செய்கின்றன.

HMPV வைரஸ் தொற்று பயங்கரமாக பரவிவருவதால், அந்த மருந்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இரண்டு மாத்திரைகள் கொண்ட ஒரு சிறு பெட்டியின் விலை 33 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது.

ப்ளூ காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த Xofluza மாத்திரைகள், தற்போது ’அற்புத மருந்து’ என அழைக்கப்படுகின்றன.

விலை அதிகமானாலும், Xofluza மாத்திரைகளை வாங்க மருந்தகங்கள் முன் மக்கள் கூட்டமாக முண்டியடித்துவரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.

Exit mobile version