உக்ரேன் போரை முடிக்க மிக நெருக்கமாக இருக்கிறோம்: புதின் மற்றும் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பின் ட்ரம்ப் அறிவிப்பு!

images 20 1

ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கை முன்னெப்போதையும் விட இப்போது மிக நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாட்டுத் தலைவர்களுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் உடனடி முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புளோரிடாவில் ஞாயிற்றுக்கிழமை (28) உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து ட்ரம்ப் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா தீவிரமாக இருப்பதாக புதின் உறுதியளித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது ரஷ்யத் தரப்பிலிருந்து சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய பகுதிகளிலிருந்து உக்ரேன் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

தற்காலிகப் போர்நிறுத்தம் என்பது உக்ரேன் மீண்டும் ஆயுதம் ஏந்தவே வழிவகுக்கும் என்பதால், பிரச்சினையின் மூல காரணத்தைத் தீர்க்கும் நிரந்தரத் தீர்வையே ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக நினைக்கிறேன். போரை முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமா என்பது இன்னும் சில வாரங்களுக்குள் தெளிவாகிவிடும். இதற்கு என்னிடம் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை,” என ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பதவியேற்ற ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், போரை நிறுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ட்ரம்ப் எடுத்து வரும் இந்த ராஜதந்திர நகர்வுகள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.

 

 

Exit mobile version