உலகம்செய்திகள்

பாராளுமன்ற கலவரம்- டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு!!

donald trump
donald-trump
Share

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம்சாட்டி வந்தார்.

இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

இந்த கலவரம் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு 1½ ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் பாராளுமன்ற குழு விசாரித்து வந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த குழு அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும், அப்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....