2 வாரமாக இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் F-35B போர் விமானம் – பார்க்கிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5

திருவனந்தபுரத்தில் இருக்கும், பிரித்தானியாவின் F-35B போர் விமானதிற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

110 மில்லியன் டொலர்களுக்கு மேலான, உலகில் விலையுயர்ந்த விமானங்களில் ஒன்றான F-35B போர் விமானம், பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமானது.

அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், அப்போது திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எரிபொருள் குறைந்த காரணத்தால், போர்க்கப்பலுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த ஜூன் 14-ஆம் திகதி, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. 2 வாரங்களுக்கு மேல் ஆகியும், அங்குள்ள Bay No. 4-ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேவையான கருவிகள் மற்றும் நிபுணர்கள் இல்லாததால், விமானத்தை சரி செய்து, கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விமானத்துக்கு, 24 மணி நேரமும், CISF படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், செயற்கைகோள் மூலம் F-35B விமானத்தை கண்காணித்து வருவதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த போர் விமானத்திற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிப் பிரிவின் அறிக்கையின் படி, நாள் ஒன்றுக்கு ரூ. 26,261வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக விமானத்தின் எடையின் அடிப்படையில் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கப்படும்.

ஆனால், இந்த போர் விமானம் இலகுவானது மற்றும் அது திட்டமிடப்பட்டது அல்ல. எனவே இந்த விஷயத்தில் அதே அளவுகோல் பொருந்தாது.

இதனால், இந்த கட்டணம் எவ்வாறு வசூலிக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Exit mobile version