7 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Share

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிசார் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.

அந்தப் பெண்ணை எச்சரித்தும் அவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாகவும் தெரிவித்த பொலிசார், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண் மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பெண், 2021இல் இதேபோல் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு, தனது மன நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே பெண்ணாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...

image 1000x630 1 1
செய்திகள்இலங்கை

பெரும்பாலான பகுதிகளில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...