34 7
உலகம்செய்திகள்

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

Share

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

பாரிஸ் (Paris) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்பி எடுத்த போது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்கான வட கொரிய (North Korea) டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீதே குறித்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வட கொரிய விளையாட்டு வீரர்கள் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சில பதக்கங்களையும் பெற்றனர்.

இதன்போது தென் கொரிய (South korea) விளையாட்டு வீரருடன் வடகொரிய விளையாட்டு வீரர்கள் Selfie எடுத்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் நிலவினாலும், இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

அப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்பட்டன.

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் செல்பி எடுத்தற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...