வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

24 6650f5e96abe9

வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் (Enga province) நிலச்சரிவு ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே மீட்பு படைக்கு மேலதிகமாக, , பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version