பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : உணவு சேகரிக்க சென்றவர்களுக்கு சோகம்

24 6604b336aacd9

பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : உணவு சேகரிக்க சென்றவர்களுக்கு சோகம்\

கடலில் விழுந்த உணவுப் பைகளை சேகரிக்கச் சென்ற பலஸ்தீனர்கள் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசிய உணவு வழங்குவதற்காக காசாவுக்கான அணுகுச் சாலைகளை இஸ்ரேல் முற்றுகையிட்டதால், பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான தினசரி உணவுப் பொருட்கள் அடங்கிய ஏராளமான பைகளை விமானத்தில் இறக்குவதற்கு அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் விமானத்தில் இருந்து விழும் உணவுப் பைகளை மீட்கவும், கடலில் விழுந்த உணவுப் பைகளை சேகரிக்க முயற்சி செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கடுமையான உணவுத் தட்டுப்பாடு காரணமாக, பாலஸ்தீனியர்கள் கடலில் விழும் உணவுப் பைகளை எடுக்க முயல்வதாகவும், நீச்சல் தெரியாதவர்கள் கூட உணவுப் பைகளைப் பெறுவதற்காக கடலுக்குள் செல்வதாகவும் காசா பகுதியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு உணவு வழங்குவதற்காக காசா எல்லையை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version