1 2 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Share

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளது.

அந்தக் குழு, தனது சமூக ஊடக சேனல்களில், பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு வாழ்க என்று பதிவிட்டுள்ளது.

பெர்லினில் பாலஸ்தீனிய சமூகத்தினர் அதிகம் வாழும் Sonnenallee என்னும் இடத்தில், சுமார் 40 நபர்கள் கூடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்து தடை செய்யப்பட்ட கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களின்போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஜேர்மானியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதுடன், குறைந்தது ஒரு ஜேர்மானியராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Share
தொடர்புடையது
5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள...

3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த...

2 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் – கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...