24 664fb0cbe278c
உலகம்செய்திகள்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

Share

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான்(Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதோடு, அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் அதிக கடன்களை பெற்றுள்ளது.ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ‘பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்’ (PIA) நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனமான PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...