tamilni 223 scaled
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள்

Share

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள்

பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இன்சாஃப் (Pakistan Tehreek Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானின் கட்சியான பிடிஐ தங்களுக்கு கிடைத்திருக்கும் புகழும் வெற்றியும் வெறும் சமூக ஊடக பிம்பத்தால் வந்ததல்ல, உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களைக் கொண்டுள்ளதால் கிடைத்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

பிடிஐ கட்சி அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 இடங்களில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

எனினும், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்கள் தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கான் ஜனாதிபதியாவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...