ஈரானிய எல்லைக்குள் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

tamilni 297

ஈரானிய எல்லைக்குள் அமைந்துள்ள பலூச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தானால் தேடப்படும் பலூச் பிரிவினைவாத அமைப்பினரின் மறைவிடங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்குள் தளங்களை அமைத்துள்ள பாகிஸ்தான் எதிர்ப்பு போராளிக் குழுக்களுக்கு எதிராக தாம் தாக்குதல்களை நடத்தியுள்ளதை பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகமும் இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது பெருமளவான பாகிஸ்தான் எதிர்ப்பு பிரிவினைவாத அமைப்பினர் கொல்லப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்குள், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தின் பதிலளிப்பதற்கான உரிமையை வலியுறுத்துவதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version