tamilnih 57 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனில் இருளில் மூழ்கிய 1000 நகரங்கள்

Share

உக்ரைன் நாட்டில் 9 பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவு, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

மக்கள் ஒரே நேரத்தில் பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரேனிய அனல் மின் நிலையங்கள் ரஷ்ய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவை முற்றாக செயற்பாட்டுக்கு வராத நிலையில் மோசமான வானிலை காரணமாக சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரேனிய மின் அமைப்பை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் அடிக்கடி இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...