1 17 scaled
உலகம்செய்திகள்

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

Share

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

இத்தாலியின் மிகவும் தேடப்பட்ட மாஃபியா தலைவன் கைதான நிலையில், தற்போது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மிகவும் கொடூரமான Cosa Nostra என்ற மாஃபியா குழுவுக்கு தலைவனான Matteo Messina Denaro என்பவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகள் பொலிசாருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் பொலிசாரிடம் சிக்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டைருந்த இவர், கடந்த மாதம் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இத்தாலியின் பல எண்ணிக்கையிலான கொலைகளுக்கு முதன்மை காரணம் டெனாரோ என்பவர் என்றே நம்பப்படுகிறது.

2002ல் இவர் மீதான கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். தமது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என முன்னர் ஒருமுறை இவர் குறிப்பிட்டது, இத்தாலியில் பரவலாக பேசப்பட்டது.

1993ல் இருந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், அதன் பின்னர் தமது சகாக்களால் மாஃபியா தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை கோமா நிலைக்கு சென்றதை அடுத்து தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீவிரமான சிகிச்சை ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என டெனாரோ கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...