ஜப்பானியக் கடற்பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வடகொரியா மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று சோதனை செய்துள்ள நிலையில், முதலில் தென்கொரியா இராணுவம் இதனை உறுதிசெய்துள்ளது.
இம்மாதத்தில் மட்டும் வடகொரியா பரிசோதிக்கும் நான்காவது ஏவுகணை சோதனையாகும்.
இன்று (17) பரிசோதிக்கப்பட்ட இந்த ‘ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்’, அவை ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாகப் பயணிக்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன என வடகொரியாவின் அரசாங்க ஊடகம் கூறியுள்ளது.
#WorldNews
Leave a comment