அமெரிக்காவின் எச்சரிக்கை கண்டுகொள்ளாத வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை முன்னெடுத்துள்ளதை அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன.
பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா சோதனை மேற்கொண்டதாகவே தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கையில், வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருப்பதாக தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியா அதனைப் பயன்படுத்தியே தற்போது ஏவுகணையை சோதனை செய்துள்ளது. நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட கொரியா சமீப காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்து வருவது கொரியா தீபகற்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#WorldNews
Leave a comment