கொரோனா பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு நேரடியாக வழங்கும் விழா ரத்துச்செய்யப்பட்டள்ளது.
நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விதர் ஹெல்ஜெசன் ஒரு செய்திக்குறிப்பில் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி, கடந்த ஆண்டைப் போலவே இம் முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
தொற்று நோய் மற்றும் சர்வதேச பயண சாத்தியக்கூறுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் நாடுகளில் அதனை பெற்றுக்கொள்வார்கள் – என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிகழ்வான நோபல் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு சாதனைகளுக்காக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment