North korea
உலகம்செய்திகள்

10 நாட்களுக்கு எவரும் சிரிக்கக் கூடாது: அரசின் அதிரடி உத்தரவு

Share

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிரிக்கத் தடை விதிக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த 10 நாட்களுக்கு வட கொரிய மக்கள் சிரிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, மற்றும் பிறந்தநாள் விழாக்கள், ஏனைய விழாக்களைக் கொண்டாடக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பத்து நாட்களில் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிம் ஜோங் இல்லின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வடகொரியாவில் இம்முறையானது கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...