tamilni 467 scaled
உலகம்செய்திகள்

பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க திட்டம்

Share

பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புதிய திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் புதிய திட்டம் உள்ளது. இந்த பகுதி மிகவும் சிறியது, புதிய வகை வழிமுறைகளை கையாளும் போது பத்து நாட்கள் வரை ஆகலாம்.

ஆனால், இது விரைவில் நிறைவுபெறும் வகையில் இருக்கும். எம்.எச். 370 பாகங்கள் கண்டுபிடிக்கும் வரை, அதற்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது,” என கூறியுள்ளார்.

குறித்த எம்.எச்.370 என்ற விமானமானது கடந்த 2014, மார்ச் 8ஆம் திகதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட நிலையில் ரேடார்களில் இருந்து காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...