tamilni 316 scaled
உலகம்செய்திகள்

ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர்

Share

ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நிராகரித்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நீடிக்கும் வரை, பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என நேதன்யாஹுவிடம், ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார்.

இருப்பினும் இந்த கோரிக்கையை நேதன்யாஹு அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சில நாடுகள் தங்களுக்கென தனி இராணுவம் வைத்துக்கொள்ளாமல் இருப்பது போல் பாலஸ்தீனத்தையும் இராணுவம் இல்லாத தனி நாடாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நேதன்யாஹுவிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...