11 22
உலகம்செய்திகள்

காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்: நெதன்யாகு அறிவிப்பு

Share

காஸாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை நிறுத்த சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படுத்திய கருத்தானது போர் நிறுத்தத்துக்கான அழைப்பை புறக்கணிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதற்கமைய காஸா பிராந்தியத்தை தமது முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும்வரை தாக்குதல் தொடரப்படும் என அவர் கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில், காஸாவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நேற்று பாலத்தீனத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை இஸ்ரேல் அனுமதித்திருந்தது.

ஆனால், ஹமாஸை முற்றிலும் ஒழிக்க முடியாமல் திண்டாடும் இஸ்ரேல், காஸா பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளதாக தற்போது கூறியுள்ளது. மேலும், “ஹமாஸுடன் சண்டை தீவிரமாக இருக்கிறது.

நாங்கள் முன்னேறி வருகிறோம். விரைவில் காஸா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...