நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம்! – கமல்ஹாசன்

கமல்ஹாசன் 750x375 1

நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம்! – கமல்ஹாசன்

நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நீட் தேர்வின் காரணமாக தனுஷ் ,கனிமொழி எனும் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பாக ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

‘ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாக்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version