1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா (NASA) விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம், அப்பயணம் உண்மை அல்ல என்று தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நாசா இந்த விளக்கத்தை அளித்தது.
சமூக ஊடகங்களில் இந்த விவாதம் சூடுபிடித்ததைத் தொடர்ந்து, நாசாவின் தற்காலிக நிர்வாகி இது குறித்துப் பேசினார்.
அவர் அளித்த பதிலில், “நாங்கள் நிலவுக்குச் சென்றுள்ளோம், அது ஒருமுறை அல்ல, ஆறு முறை” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாசாவின் புகழ்பெற்ற அபோல்லோ 11 (Apollo 11) பயணத்தின் போதுதான், நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் 1969 ஆம் ஆண்டில் முதன்முதலாக நிலவில் காலடி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலங்கள் கடந்த பிறகும், இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பல்வேறு முரண்பாடான கருத்துகளும் சந்தேகங்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.