உலகம்செய்திகள்

25 கோடி Rolls-Royce காரில் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் சென்ற ஆனந்த் அம்பானி

Share
24 66141cdc9471d
Share

25 கோடி Rolls-Royce காரில் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் சென்ற ஆனந்த் அம்பானி

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்.

அவர் சொகுசு கார்கள் மற்றும் கைக்கடிகாரங்களின் பாரிய சேகரிப்பை வைத்திருக்கிறார்.

தற்போது கோடீஸ்வரரான ஆனந்த் அம்பானி தனது வருங்கால மனைவியுடன் துபாயில் நடந்து வரும் காணொளி வைரலாகி வருகிறது.

இந்தியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.

Bloomberg Billionaires Index-ன் படி முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு 112 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ. 33,50,477 கோடி) மதிப்புள்ள சொத்து உள்ளது.

சமீபத்தில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகின் முன்னணி பணக்காரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் சென்றனர்.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த விலையுயர்ந்த கடிகாரத்தை Meta உரிமையாளர் ஜுக்கர்பெர்க் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

இப்போது, துபாயில் உள்ள Rimowa store-ல் இருந்து ஆனந்த் அம்பானி ஷாப்பிங் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி சுமார் ரூ. 25 கோடி மதிப்புள்ள 20 கார்கள் கொண்ட கான்வாயுடன் ஷாப்பிங் சென்றார்.

அனந்த் அம்பானி ஆரஞ்சு நிற Rolls-Royce Cullinan Black Badge SUVயில் பயணம் செய்தார். இந்தியாவில் இதன் விலை ரூ.10 கோடி.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவி இந்தியாவில் விற்கப்படும் மிக விலையுயர்ந்த எஸ்யூவி.. ஆனந்த் அம்பானி வீட்டில் இதுபோன்ற பல சொகுசு கார்கள் உள்ளன.

இந்த பாரிய SUV தவிர, ஒரு ஆம்புலன்ஸும் கான்வாயின் ஒரு பகுதியாக காணப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் Automobiliardent பகிர்ந்த காணொளி அனந்த் அம்பானியின் மாபெரும் வாகனப் பேரணியைக் காட்டுகிறது.

இந்தியாவின் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் அடக்கமான நடத்தைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனந்த் அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இப்போது Reliance New Energy Business-ஐ நிர்வகிக்கிறார்.

அனந்த் அம்பானி அம்பானி குழுமத்தில் ரிலையன்ஸ் 02C மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜியின் இயக்குநராக உள்ளார். ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.11,96,599 கோடி) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...