mukesh ambhani
இந்தியாஉலகம்செய்திகள்

மீண்டும் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி

Share

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின.

4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

#world #India

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...