ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு இந்தியாவில் துக்க தினம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மறைவை அடுத்து, இந்தியாவில் நாளை (21.05.2024) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாவது, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் நாளை (21) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் நாளை தேசியக் கொடி தவறாமல் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், நாளைய தினம் அதிகாரபூர்வ கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Ebrahim Raisi
- ebrahim raisi president
- India
- iran
- iran helicopter crash
- iran news
- iran president
- iran president dead
- iran president death news
- iran president ebrahim raisi
- iran president helicopter
- iran president helicopter convoy
- iran president helicopter crash
- iran president update news
- iranian president
- Iranian President Ebrahim Raisi
- iranian president helicopter crash
- irans president ebrahim raisi
- Mourning Observed In India Death Of Ebrahim Raisi
- president ebrahim raisi
- president of iran helicopter crash
- World