srk
உலகம்சினிமாசெய்திகள்

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்கள் – ஷாருக்கானுக்கு முதலிடம்

Share

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#world #Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...