14 11
இந்தியாஉலகம்செய்திகள்

அமெரிக்காவிலிருந்து 400ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றம்!

Share

அமெரிக்காவிலிருந்து 400ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்படலாம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகச் சந்தேகிக்கப்படும் 104 இந்தியர்களை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திருப்பி நாடுகடத்தியிருந்தது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில விடயங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

”அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் கவலை தெரிவித்தோம்.

இது போன்ற செயலை தவிர்த்திருக்கலாம் எனக் கூறினோம். நாடுகடத்தப்படுபவர்களைத் தவறாக நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர்களில் 298 பேரின் விவரங்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...