மோடி அபசகுனம் பிடித்தவர்.., அவர் மேட்ச் பார்க்க போனதால் இந்தியா தோற்றது: ராகுல்காந்தி கிளப்பும் சர்ச்சை

4 14

மோடி அபசகுனம் பிடித்தவர்.., அவர் மேட்ச் பார்க்க போனதால் இந்தியா தோற்றது: ராகுல்காந்தி கிளப்பும் சர்ச்சை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்றத்திற்கு மோடியின் அபசகுனம் தான் காரணம் என ராகுல் காந்தி சர்ச்சையாக பேசியுள்ளார்.

ராகுல் காந்தி பேசியது..
காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென டிவியில் தோன்றி இந்து, முஸ்லீம் பற்றி பேசுவார். திடீரென கிரிக்கெட் பார்ப்பதற்கு செல்வார். ஆனால், இந்தியா தோற்றுவிடுவது வேற விடயம். அவர் ஒரு அபசகுனம் பிடித்தவர். பி.எம் என்றால் அபசகுனம் என்று அர்த்தம்” என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், “நாட்டின் பிரதமரை அபசகுனம் பிடித்தவர் என்று ராகுல்காந்தி கூறுவது கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது. அவரது உண்மையான முகத்தை காட்டிவிட்டார்.

சட்டமன்ற தேர்தலில் ஏற்படும் தோல்வியை அறிந்ததால் இப்படி செய்கிறார். அவர், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனை ஆக்குவோம்” என்றார்.

Exit mobile version