நத்தார் பண்டிகையை பொதுமக்களோடு கொண்டாடிய மோடி
இந்திய பிரதமர் நேரந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நத்தார் தின நிகழ்வை நடத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.
மேலும், உலகம் முழுக்க நத்தார் பண்டிகையை கொண்டாடும் மக்களை வாழ்த்தியதோடு, இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கடந்த 2021ஆம் ஆண்டு வத்திகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
அவரது இல்லத்தில் நத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், நேற்று(25) நத்தார் நிகழ்ச்சி புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
Comments are closed.