8
இலங்கைஉலகம்செய்திகள்

உலக அழகிப் போட்டி – 2025! இலங்கையின் அழகி அனுதிக்கு ஹரினியின் செய்தி..

Share

சர்வதேச அரங்கில் இலங்கையை கண்ணியத்துடனும், பெருமையுடனும் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு அனுதி குணசேகரவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இந்தியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கையின் அனுதி குணசேகரவும் இந்தப்போட்டியில் பங்கேற்றார்.

எனினும், அவர், பல்ஊடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான நிலையில் இருந்தபோதும், காலிறுதிக்கான தகுதிப்பெற்ற 40 பேரில் அவர் தெரிவாகவில்லை.

இந்தநிலையில், பிரதமர் ஹரினி அமரசூரிய, அனுதி குணசேகர தொடர்பில் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,

“2025 உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர இந்த அளவு முன்னேறியமை இலங்கையர் என்ற வகையில் எமக்குப் பெருமை தருகின்றது.

அவரது பங்கேற்பு இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வசிக்கும் ரசிகர்களின் கவனத்தை எமது தாய் நாட்டின் மீது ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது.

அனுதி, உங்களது எதிர்காலப் பயணத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள்! சர்வதேச அரங்கில் கௌரவமும் அபிமானமும் மிக்க வகையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...