மீண்டும் ஏவுகணை சோதனை

1776475 north

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது.

கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா, குறுகிய தூர ஏவுகணையை சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்தது.

மேலும் தென் கொரியா எல்லை அருகே வடகொரியாவின் போர் விமானங்கள் பறந்து சென்றதாகவும் தெரிவித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

#world

 

Exit mobile version