25 684dab0702de3
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்! முக்கிய அரசியல்வாதி படுகொலை..

Share

மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல்வாதியான மெலிசா ஹோர்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(14.06.2025) மெலிசா ஹோர்ட்மேனின் வீட்டில் நடந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி போல வேடமணிந்து வந்து ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் பொலிஸ் வாகனம் போல தோற்றமளிக்கும் வாகனம் ஒன்றில் தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில செனட்டர் ஜோன் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனித்தனி துப்பாக்கிச் சூட்டில் தங்கள் வீட்டில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பலமுறை சுடப்பட்ட போதிலும் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொடூரம்! முக்கிய அரசியல்வாதி படுகொலை.. | Melissa Hortman Killed In Her House America

சந்தேக நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...