kHyqH7EX3jCiK4EuR6hu
உலகம்செய்திகள்

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவகுழு சாதனை !

Share

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை  14 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரித்து  மருத்துவ குழு சாதனை படைத்துள்ளது.

நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவை சவூதியின் சிறப்பு அறுவை சிகிச்சைக் குழு  14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு  பிரித்துள்ளது.

அதில், 36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு மற்றும் பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் இணைந்து  இந்த அறுவை சிகிச்சையை  எட்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் சவுதி திட்டத்தின் 56 ஆவது  அறுவை சிகிச்சையாக இது திகழ்கின்றது.

கடந்த 33 ஆண்டுகளில் சவுதி திட்டம் 23 நாடுகளைச் சேர்ந்த 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு அல்-ரபீஹ் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்தச் சாதனையானது மக்கள் எங்கிருந்தாலும் மக்களுக்கு உதவுவதற்கான புத்திசாலித்தனமான தலைமையின் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இது  சவூதியின் மருத்துவச் சிறப்பையும் பிரதிபலிப்பதுடன், சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களுடன் இராஜ்ஜியத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும் அதன் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...