1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

Share

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி நாளில் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

சென்னையில், குடும்பம் குடும்பமாக மக்கள் தீவுத்திடலுக்குச் சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். அவ்வப்போது சிறிது நேரம் மழை பெய்தாலும், அது உடனடியாக நின்றதால், தீபாவளிப் பட்டாசு விற்பனை களைகட்டியது. சென்னையில் பல பகுதிகளில் உள்ள கடைகளில் கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த 3 நாட்களில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் மூலம் சேகரிக்கப்பட்ட 151 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகபட்சமாகப் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்ட மண்டலங்கள்:
தண்டையார்பேட்டை மண்டலம்: 17 மெட்ரிக் டன்
ஆலந்தூர் மண்டலம்: 13 மெட்ரிக் டன்
கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்கள்: தலா 12 மெட்ரிக் டன்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...